முதல்வர் விஜயை சந்திக்க வந்த மு.க.அழகிரி மகள் & more related news here

முதல்வர் விஜயை சந்திக்க வந்த மு.க.அழகிரி மகள்

 & more related news here


கயல்விழி

கயல்விழி (ETV Bharat Tamil Nadu)

சென்னை: மு.க.அழகிரியின் மகள் கயல்விழி முதலமைச்சர் விஜயை சந்திக்க தலைமைச் செயலகம் வந்த நிலையில், அவரை சந்திக்க முடியாததால் அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேத்தியும், திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.அழகிரியின் மகளுமான கயல்விழி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்திக்க இன்று வந்திருந்தார்.

2026 கழகத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இந்த சூழலில் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்றார். அந்த பதவியேற்பு விழாவில் கயல்விழி கலந்து கொண்டார். இதன் காரணமாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய போகிறார் என்றும், மதுரை மாவட்டத்தில் தவெக கட்சியில் மிக முக்கிய பதவியை கேட்டு பெற வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தன.

இந்த சூழலில் இன்றைய தினம் கயல்விழி சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்து முதலமைச்சர் சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இன்றைய தினம் அலுவல் பணி காரணமாக முதலமைச்சரை சந்திக்க முடியாமல் போனத் தலைமைச் செயலகத்தில் ஒரு சில முக்கிய அமைச்சர்களை நேரில் சந்தித்து கயல்விழி பேசினார். சரியாக காலை 11.20 மணிக்கு தலைமை்த கயல்விழி பல்வேறு அமைச்சர்களை ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசினார்.

தலைமைச் செயலகம் வருகை குறித்து “கயல்விழியிடம் கேட்ட போது,” சந்திக்க தலைமைச் செயலகம் வந்தேன் ஆனால். அலுவல் பணி காரணமாக அவரை சந்திக்க முடியாமல் ” என தெரிவித்தார்.

திமுகவில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு மு.க.அழகிரி நீக்கப்பட்ட நிலையில், அவரின் ஆதரவாளர்களும் மற்ற கட்சிகளில் தங்களை இணைத்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் கயல்விழி தவெகவில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *